ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்

0
203

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக வைத்தியர் சங்கங்களின் சம்மேளனம், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று உள்ளே நுழைய முயற்சித்தமையே இதற்குக் காரணம்.

ஜனாதிபதி செயலகத்தை அண்மிக்கும் முன்னர் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு தடை இட்டு குழுவை தடுத்து நிறுத்திய பின்னர் மேலதிக செயலாளர் ஒருவர் வந்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி கலந்துரையாடலுக்கு வேறு திகதி தருவதாக கூறிய போதும் அதனை ஏற்க மறுத்து அது தொடர்பில் கலந்துரையாடுமாறு கோரினர். ஆனால் அந்த விவாதம் காரணமாக குழுவினர் கலைந்து சென்றனர், கலைந்து செல்வதற்கு முன்பு அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் மீண்டும் வருவோம் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here