தற்போது நிலவும் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 மற்றும் ஹெக்டேருக்கு ரூ.100,000 இழப்பீடு வழங்க வேளாண் காப்பீட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இன்று (24) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் பி ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி 51,479 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், நெல் விவசாயம் மாத்திரம் 51,055 ஏக்கரில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். மொத்தமாக சுமார் 1000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “நெல், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், சோயா என்பன அரசாங்கத்தினால் சுயகாப்பீடு செய்யப்பட்டுள்ளன. எனவே, விவசாயம் மற்றும் கமநல காப்புறுதிச் சபையானது ஏக்கருக்கு 40,000 ரூபா அல்லது ஒரு ஹெக்டேருக்கு 100,000 ரூபா வழங்க தீர்மானித்துள்ளது. ஆனால் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் இதுவரையில் பதிவாகவில்லை” என்றார்.