கணேமுல்ல துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான
விசாரணைகள் ஆரம்பம்

0
214

கணேமுல்ல, மகலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் முழு முக தலைக்கவசம் அணிந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வீட்டில் இருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகளின் படி, சந்தேக நபர்கள் வீட்டின் வெளிப்புறத்தை பல சுற்றுகள் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சந்தேக நபர்களை கைது செய்ய கனேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here