பிற நாடுகளிடம் கையேந்தாது சுயமாக முன்னேறுவோம்

0
199

மேலும் பிற நாடுகளிடம் உதவி கேட்பதை தவிர்த்துவிட்டு எமது நாட்டிற்கு தேவையான அபிவிருத்தியை நாமே ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்க இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் இங்கு வெற்றி பெற்றுள்ளோம் என்று நம்புகிறேன். அதாவது நாம் மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டும். நாம் முதலில் இருந்து தொடங்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்திற்காக நாம் பணத்தை செலவிட வேண்டும். அந்நிய முதலீட்டை ஈர்க்க வேண்டும். இவைதான் நாம் செய்ய வேண்டியவை.

ஏனென்றால், மற்ற நாடுகளின் உதவியின்றி நம்மை நாமே வளர்த்துக் கொள்ள முடிந்தால், அதைச் செய்யலாம் என்று நினைக்கிறேன். பிராந்தியத்தில் பல நாடுகள் இதைச் செய்தன. அப்படியானால், இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக தனித்து நிற்போம்”.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை நிலையான அபிவிருத்தி மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here