திலித் ஜயவீர – கோட்டா இணையும் கூட்டு

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வௌ்யிட்டுள்ளது.

தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக Daily Mirror பத்திரிகையின் முதற்பக்கத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் மூலம் இழந்த தனது நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் தயாராகி வருவதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தாலும், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தொழிலதிபர் திலித் ஜயவீரவினால் வாங்கப்பட்ட மவ்பிம மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜயவீர, மவ்பிம மக்கள் கட்சியை பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் யாப்பு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி குறித்த பத்திரிகை கூறியுள்ளது.கோட்டாபய ராஜபக்ஸவின் வியத்மக அமைப்பிற்கு இணையாக புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதுடன், கல்விமான்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் Daily Mirror பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மவ்பிம மக்கள் கட்சியும் திலித் ஜயவீரவின் அமைப்பும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் மவ்பிம மக்கள் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார, குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இந்த செய்தி குறித்து தொழிலதிபர் திலித் ஜயவீர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார். Daily Mirror பத்திரிகையின் நண்பர்களே, இங்குள்ள தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் தவறாக வழிநடத்துகிறது. தயவுசெய்து என்னை அழைக்கவும், நான் உங்களுக்கு சரியான விடயங்களை வழங்குகின்றேன் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...