திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு யாழ். பொலிஸாரால் இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மீண்டும் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
திலீபன் நினைவேந்தல் வன்முறையாக மாற்றமடைவதால், நினைவு தின நிகழ்வுகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்றில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ். நீதவான் A.A.ஆனந்தராஜா நினைவு தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை யாழ். நீதவான் நீதிமன்றம் இதற்கு முன்னரும் தள்ளுபடி செய்திருந்தது.