Saturday, November 23, 2024

Latest Posts

2013ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்வின் ஆட்சியில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கான செலவில் பாரிய ஊழல்

2013ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்காக (CHOGM) தேவையற்ற விதத்தில் பாரிய அளவில் நிதி செலவிடப்பட்டுள்ளதுடன், இதில் பல ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அண்மையில் வெளியாகியுள்ள நிதி பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களியாட்டத்திற்காக பாரியளவில் நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் பாரிய அளவில் ஊழல் செய்ததன் காரணமாகவே இந்த மாநாடு தொடர்பான இயல்புநிலை அறிக்கையை ராஜபக்ஷவின் ஆட்சி வெளியிடவில்லை எனவும் இந்நிதி பகுப்பாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நகரம் மற்றும் சாலைகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் அப்போதைய கொழும்பு மேயரால் பெறப்பட்ட அரச வங்கிக் கடனில் 800 மில்லியன் ரூபாவை கொழும்பு மாநகரசபை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த பாரிய கடன் தொகையானது அரச வங்கி இருப்புநிலைக் குறிப்பில் திரும்பப் பெறுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதனைத் தள்ளுபடி செய்ய அனுமதிக்காமல் செயற்படாத கடனாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு வங்கிகளில் பெறப்படும் கடன்களை அரசா ங்கம் செலுத்துவதில்லை. ஆனால், அப்பாவி ஏழைகள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையாக ரூ.100,000 அல்லது ரூ.200000 ஐ திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றன.
2013ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட நாற்பத்தொன்பது சொகுசுப் பேருந்துகள் மாநாட்டுக்கு பயன்படுத்தப்பட்டதன் பின்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அவை தற்போது செயலிழந்து நீண்டகாலமாகியுள்ளது. அவற்றை சரிசெய்ய உதிரி பாகங்கள் இல்லை என இலங்கை போக்குவரத்துச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த பேருந்துகளில் தினசரி வருவாய் ரூ. 80,000 முதல் 90,000 வரை காணப்பட்டது. இவை அரச திறைசேரிக்கு சென்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு (CHOGM) விளம்பரம் மற்றும் ஊடகப் பரப்புரைக்காக, வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சினால் 1.18 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது உத்தியோகபூர்வ ஆவணங்களில் தெரியவந்துள்ளது.
2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான இரவு விருந்துக்காக 10 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
அதன்படி, திறைசேரி மானியங்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியானது, ஒன்பது வகைகளின் கீழ் செலவிடப்பட்டுள்ளது. ஊடக மையத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, மின்னணு ஊடகங்களில் விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு இவ்வாறு நிதி செலவிடப்பட்டுள்ளது.
அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும், உத்தியோகபூர்வ சின்னம் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பொழுதுபோக்கு, இரவு உணவுகள், CHOGM திட்ட அலுவலக அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள், அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பிற செலவுகளுக்கு பாரிய தொகை செலவிடப்பட்டுள்ளது.
,ஊடக மையத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்காக 8.28 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும், மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக 180.55 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) கலந்துகொண்ட அரச தலைவர்களின் துணைவிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான brooches களுக்காக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் உளடளதாகவும் கூறப்படுகிறது.
72 brooches தயாரிப்பதற்கான உண்மையான செலவு ரூ.2.88 மில்லியன் செலவாகும் என கைவினைஞர் ஒருவர் குறிப்பிட்டாலும் 72 brooches களை தயாரிப்பதற்கு மொத்தமாக ரூ.18 மில்லியன் செலவு செலவாகியுள்ளதாக நிதி பகுப்பாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நிதி முறைகேடு நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் ஊழல் பேரத்தில் ஈடுபட்ட எந்த அதிகாரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.