கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர்.
C.Z.K. Huarui Cultural and Art Company என்ற பீஜிங்கை தலைமையகமாக கொண்ட அரசுசார் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் குழுவே இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளனர்.
குறித்த குழுவில் நிறுவனத்தின் பொது முகாமையாளர் உட்பட மேலும் 03 பேர் வருகைத்தந்துள்ளனர்.
50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இவர்கள் முன்னெடுக்க உள்ளனர்.
மேலும், இந்த முதலீட்டாளர்கள் குழு இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதுடன், இந்த முதலீட்டில் மின்சார வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது