2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகள் மாத்திரம் 06.10.2023 முதல் 10.10.2023 வரை 23:59:00 மணிக்குள் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
அதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.donets.lk ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.