தொடரும் பணிப்புறக்கணிப்பு; அலுவலக ரயில் சேவையில் தாமதம்

0
124

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் தொடங்கப்பட்ட பணி புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

மாளிகாவத்தை புகையிரத வீதியின் நுழைவாயிலில் வைத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04) முதல் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி நேற்று சுமார் 78 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

எவ்வாறாயினும், நேற்று தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு அதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்திருந்தது.

ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட ஏனைய நபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரயில்வே பிரதி கட்டுப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here