பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தற்போதைய புதிய தொழிலாளர் சட்ட மூலம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏனைய சில முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளர் ரமேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்
இலங்கையின் பல்வேறு துறைகளில் உள்ள 14 முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கருத்துக்கள் சட்டமூல வரைபில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதால் ஒன்றாக நின்று குரல் கொடுப்பது தொடர்பிலும் பரிந்துரைகளை முன்வைப்பது தொடர்பிலும் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.







