ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்; இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்து

0
180

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின்(IORA)அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மூன்று புதிய இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

‘IORA’ (Indian Ocean Rim Association) என அழைக்கப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.

இன்றைய தினம் ‘IORA’ மாநாட்டில் கலந்துகொண்ட எஸ்.ஜெய்சங்கர், சற்றுமுன்னர் ஜனாதிபதியை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது முதலீடுகளை ஊக்குவிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here