இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும்; சுசில் பிரேம ஜயந்த

Date:

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“ இலங்கையின் கல்வி முறைமைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இலங்கையின் முன்பள்ளிக் கல்வி, பாடசாலைக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய நான்கு துறைகளும் ஏனைய முன்னேறிய கல்வி முறைகளுக்கு அமைவாக பாடநெறிகள் மற்றும் வளங்களுக்கு இணையாக அபிவிருத்தி செய்யப்படும்.

இதனடிப்படையில் குறித்த நான்கு கல்வித் துறைகளும் சர்வதேச மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும்.
எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஆசிரியர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும்.
இதன்மூலம் யாழ் குடாநாட்டின் கேந்திர நிலையமாக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அமையும்.

வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர் பயிலுனர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும். இதன்மூலம், 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பயிற்சியுடன் பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் இருந்து முறையான தொழில்சார் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான பரந்த வாய்ப்புகள் உருவாக்கப்படும்” இவ்வாறு சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...