கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின நியமனம்!

0
146

கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்றார்.

இப்பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்று மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் வைபவ ரீதியாக காலை 10.00மணி அளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here