”இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) தெவட்டகஹா இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டதாகவும், பாலஸ்தீனத்துடன் இலங்கை தொடர்ந்தும் நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பாலஸ்தீனம் ஒருபோதும் தனித்து விடப்படாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன், இஸ்லாமிய சமய வழிபாடுகளுக்குப் பின் அவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதைக் காண முடிந்தது.















புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன