நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் சார்ப்பில் இன்று உயர்நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
சட்டத்தில் பல விதிகள் திருத்தப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும், நாளையும், நாளைமறுதினமும் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போதே சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.