கிழக்கில் புத்தர் சிலையை அமைப்பது பௌத்த மேலாதீக்கத்தின் வெளிப்பாடு

0
152

ஜனாதிபதியின் ஆணையினை மீறி கிழக்கில் முன்னாள் ஆளுநர் தலைமையில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை பௌத்த மேலாதிக்க நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியின் பேச்சை மீறி செயற்படும் தலைமைகளும், மக்களுமே கிழக்கில் உள்ளனர். எனவே ஜனாதிபதியின் பேச்சை மீறிய செயற்பாடுகளே அங்கு இடம்பெறுகின்றன.

தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்த போதிலும்கூட கிழக்கில் முன்னாள் ஆளுநர் தலைமையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தவேளை மயிலத்தமடுவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினேன்.

மட்டுவில் தமிழ் மக்களின் கால்நடைகளை அழித்து, இடங்களை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்குகின்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றன.

இம்மக்களின் காணிகளை விடுவிக்குமாறும், அக்காணிகளை மீளவும் அம்மக்களிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மாத்திரமல்லாமல், அங்கு தமிழ் மக்கள் போக முடியாதவாறு அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன.

தற்போது கிழக்கில் திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன” எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here