யாழில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்

Date:

யாழ்ப்பாணத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்T யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.

“போர்ச் சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து துணிவாக ஊடகப் பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

இந்நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுததாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

பின்னர் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். இதில் நிமலராஜனின் தந்தை, தாய் மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...