தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி

Date:

372 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் மேலும் 400-500 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேசிய வைத்தியசாலையின் தாதியர்களின் எண்ணிக்கை சுமார் 12% குறைந்துள்ளதுடன் தற்போது தேசிய வைத்தியசாலையில் சுமார் 2400 தாதி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலைமையினால் தேசிய வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனால் பல்வேறு திணைக்களங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு படுக்கைக்கு ஒரு தாதி இருக்க வேண்டும் என்பது பொதுவான வடிவமைப்பாக இருந்தாலும், தற்போது இரண்டு படுக்கைகளுக்கு ஒரு தாதி மட்டுமே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...