கனடிய தூதர்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறை இரு நாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை கடினமாக்குகிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
பிரம்டனில் செய்தியாளர்களிடம் இன்று கருத்து வௌியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
41 தூதரக அதிகாரிகளின் மீள அழைக்க வேண்டும் என்ற இந்தியாவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து தூதுவர்களை கனடா மீள அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பின்னணியில் ட்ரூடோ இவ்வாறு கூறியுள்ளார்.
கனடாவில் ஜூன் மாதம் நடந்த சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொலையில் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ கடந்த மாதம் தெரிவித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டது.
இந்திய அரசின் அடக்குமுறை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடினமாக்குகிறது – கனடா பிரதமர்
இந்தியாவிலிருந்து வெளியேறிய 41 கனேடிய தூதர்கள்
இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மோதல்கள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, “இந்திய அரசு, இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை வழக்கம் போல் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக்குகிறது” என ஜஸ்டின் ட்ரூடோ இன்று கூறியுள்ளார்.
அவர்கள் இராஜதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையை மீறுவதன் மூலம் அவர்கள் இதைச் செய்கிறார்கள்” என்று ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்திய துணைக் கண்டத்தில் தங்கள் பூர்வீகத்தைக் கண்டறியும் மில்லியன் கணக்கான கனேடியர்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்காக இது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
கனடாவின் தூதரக அதிகாரிகள் சிலர் வெளியேற்றப்படுவது பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் இடையூறாக இருக்கும் என்றும் கனடாவில் படிக்கும் இந்தியர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுமார் இரண்டு மில்லியன் கனடியர்கள், மொத்த மக்கள் தொகையில் ஐந்து வீதம் பேர், இந்திய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.
கனடாவின் உலகளாவிய மாணவர்களின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா உள்ளது, இது ஏறக்குறைய 40 வீத கல்வி அனுமதி வைத்திருப்பவர்களைக் கொண்டுள்ளது.
இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையை மீறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் முன்னதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.