அம்பாறையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; இருவர் சாவு

Date:

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் சாவடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள், ஓட்டோ ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது எதிரில் வந்த மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 51 மற்றும் 77 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பொத்துவில் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார் எனவும், பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...