ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கு அனுமதி கிடைத்தால், மிகக் குறுகிய காலத்திற்குள் ரயில் சேவைகள் மீளமைக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் தற்போது சுமார் 7,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் நேற்று (01) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்