உலக முடிவை காண டயகாமம் வழியே புதிய பாதை திறப்பு

0
152

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் டயகம ஊடாக ஹோர்டன் சமவெளிக்கான புதிய அணுகு வீதி நாளை (28) திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிய வீதியை வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார ஆகியோர் திறந்து வைக்கவுள்ளதாக பூங்கா காப்பாளர் சிசிர ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகள் நடந்து செல்லவோ அல்லது சைக்கிள் ஓட்டவோ இந்த சாலை இயற்கையான பாதையாக இருக்கும் என்றார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் இவ் வீதியில் மற்ற வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்று ரத்நாயக்க கூறினார்.

புதிய அணுகு வீதியானது டயகம பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை நீக்குவதுடன் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என வன பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹோர்டன் சமவெளி பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு இப்போது மூன்று அணுகல் சாலைகள் இருக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here