ஹமாஸ் மீது அமெரிக்கா பொருளாதார தடை

0
150

ஹமாஸ் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடையாக இது உள்ளதுடன், ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற போராளிக் குழுக்களை ஈரான் ஆதரிக்கிறது என்பது அமெரிக்காவின் நீண்ட காலக் குற்றச்சாட்டு. அதன்படி, இந்தக் குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி அளிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here