சரத் பொன்சேகாவை விரட்டுமா SJB?

0
135

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க சமகி ஜன பலவேகய கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தகவல் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இறுதி முடிவை எடுக்கவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக கட்சி நலன்களுக்கு எதிராக செயல்படுகிறார். இது மோசமானது. சில எஸ்ஜேபி எம்பிக்கள் பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், ஆனால் அது எந்த முடிவையும் தரவில்லை. அவர் யாருடைய பேச்சையும் கேட்பதாக தெரியவில்லை” என முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை நிராகரிக்காமல் மத்தும பண்டார கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவை ஆதரிக்க விரும்பவில்லை என அண்மையில் தம்மைச் சந்தித்த SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பொன்சேகா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

“எஸ்.ஜே.பி.யை அழிக்க ஆர்வமுள்ள தரப்பினரால் சில கதைகள் விதைக்கப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here