பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

தொடர்ந்து பெய்து வரும் கனமழையுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, நேற்று(31) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, புலத்கொஹுபிடிய மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் தும்பனை மற்றும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை முதலாம் நிலை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு கீழே.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...