மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் சந்திவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து இன்று காலை மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முறக்கொட்டாஞ்சேனை மாரியம்மன் ஆலய முன்றிலிலிருந்து பேரணியொன்றை ஆரம்பித்த மாணவர்கள் சித்தாண்டியில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் இடம்நோக்கி ஊர்வலமாக சென்றுகொண்டிருந்த நிலையில் அங்குவந்த பொலிஸருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பேரணியானது சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பண்ணையாளர்களின் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தபோது அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்ட போராட்டத்திற்கு அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அப்பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் புகைக்குண்டு குண்டுத்தாக்குதல் நடாத்தும் ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்டிருந்தபோதும் மாணவர்கள் வீதியில் மருங்கில் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருதிருந்தனர்.
வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழர்கள் தாயகம், அரசாங்கமே மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதியைக்கொடு, கொல்லாதே கொல்லாதே பசுக்களை கொல்லாதே, வெளியேறு வெளியேறு எமது இடத்தை விட்டு வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த போராட்டம் நிறைவநை;து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமது பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வந்தாறுமூலை,களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி பொலிஸார் அவர்களில் ஆறு பேரை கைது செய்து செய்துள்ளனர்