நேரடி அரசியலில் ஈடுபடத் தூண்டிய காரணத்தை விளக்குகிறார் திலித்

Date:

மவ்பிம ஜனதா கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடாக காலி மாவட்ட மாநாடு நேற்று (05) காலை காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மவ்பிம ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார, கட்சியின் தவிசாளர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய திலித் ஜயவீர, தான் 30 வருடங்களாக மறைமுகமாக அரசியலில் ஈடுபட்டு இலங்கையில் தேசியவாத அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவித்தார்.

அந்த தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் காரணமாக அந்த அணியை காட்டிக்கொடுத்த பின்னணியில் அதனை பாதுகாப்பதற்காக நேரடியாக அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முகாம் என்பது இந்த நாட்டை நேசிக்கும் தேசபக்தர்களின் முகாம் என்று கூறிய ஜெயவீர, அந்த முகாமில் வேறு யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், தேசிய முகாமில் யாராவது இணைந்தால் அது மௌபிம ஜனதா கட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டத்தில் மட்டுமே இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

மாநாட்டின் பின்னர் திலித் ஜயவீர, அங்கு கூடியிருந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...