மாநாட்டிற்கு மாற்றங்களுடன் தயாராகும் மொட்டுக் கட்சி

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய பொது மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சுகததாச உள்ளக மைதானத்தில் இது இடம்பெறவுள்ளது.

இதில் கட்சி அமைச்சர்கள், சார்பு அமைப்பு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சகோதர கட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன், பொஹொட்டுவ தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது குறித்தும், அந்த கூட்டணிக்கு பொருத்தமான தலைவரை தெரிவிப்பது குறித்தும் கட்சியின் சிரேஷ்டர்கள் மத்தியில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் இந்த ஆண்டு தேசிய மாநாட்டில் இது தொடர்பான பல முடிவுகள் எடுக்கப்படும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மாதிரி தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாகவும் புதிதாக கட்சித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...