ஏற்றுமதி சார்ந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தி திட்டத்திற்கு அனுமதி

0
63

உலக சந்தையில் ஸ்ட்ரோபெரிக்கு அதிக கேள்வி இருப்பதால், ஏற்றுமதி சார்ந்த ஸ்ட்ராபெரி உற்பத்தி திட்டத்திற்கு விவசாய அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு உள்ளூர் உற்பத்தியாளர்கள் குழுவினால் முன்மொழியப்பட்ட முன்மொழிவையடுத்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னோடி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஸ்ட்ராபெரி உற்பத்திக்கு நுவரெலியாவில் அமைச்சுக்கு சொந்தமான ஒரு ஹெக்டயர் காணியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி திறனை பார்த்து தேவை ஏற்படின் மேலும் 10 ஹெக்டயர் காணியை வழங்கலாம் என அமைச்சர் உறுதியளித்தார்.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்டால், ஒரு ஹெக்டயரில் இருந்து ஆண்டுக்கு சுமார் 117,600 அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்ட முடியும். ஒரு ஹெக்டயரில் இருந்து 120,000 கிலோ விளைச்சல் பெறலாம். மேலும், ஒரு ஹெக்டயரில் உற்பத்தி செய்ய முதலீடு செய்யப்பட்ட தொகை 250 மில்லியன் ரூபாய் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here