அமைச்சர் ரொஷானுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

0
231

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடமிருந்து 240 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (13) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், உப தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இந்த வழக்கின் மனுதாரர்களாக உள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அறிக்கைகள் இலங்கை கிரிக்கெட்டின் நன்மதிப்பை உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் களங்கப்படுத்தியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here