மக்களை பெருமிதம் அடையச் செய்த கிழக்கு ஆளுநரின் துரித நடவடிக்கை

0
168

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்ட கோனோகொல்ல கிராமத்திற்கு விஜயம் செய்த போது அப்பகுதி மக்கள் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரினாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அந்த வேண்டுகோளுக்கு இணங்க 34 மில்லியன் ரூபா செலவில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோனோகொல்ல கிராமத்தில் வைத்தியசாலை நிர்மாணிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆளுநரின் முயற்சியால் கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு மாத காலத்திற்குள் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் இந்த துரித நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here