இன்று (20) நண்பகல் 12 மணியளவில் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக இந்த நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய கோப் குழுவை தொடர்வதா அல்லது கலைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களை நியமிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.
கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் நடத்தப்பட மாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.