பொலிஸ் சித்திரவதையால் இறந்த இளைஞனின் குடும்பத்துக்கு ஈ.சரவணபவன் நேரில்சென்று ஆறுதல்!

0
145

வட்டுக்கோட்டையில் பொலிஸ் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் அதில் கலந்துகொண்டார்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன். இந்த விடயம் தொடர் பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இளைஞரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர் இந்த விடயத்தில் நீதியை நிலை நாட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்பின்னர் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன், இந்த இந்த விடயம் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த அவர் வட்டுக்கோட்டைப் பொலிஸார் தொடர்பாக மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்கள்,பிரதேச மக்கள் மற்றும் இளைஞனின் குடும்பத்தினரின் ஆதங்கம் என்பவற்றை எடுத்துரைத்தேன்.

இந்தச் சம்பவம் தொடர்பான நீதியான விசாரணைகள் நடைபெறும். முழுமையான மருத்துவ அறிக்கைகளை எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here