மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பதை தடுக்க நீதிமன்றில் மனு

Date:

எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கினர்.

இதன்போது, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இம்மாதம் 27ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடைபெறவுள்ள சட்டவிரோத மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...