புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரை 9 மாகாணங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வழமை போன்று மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நான்காவது சேவை நீடிப்பு நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
விக்கிரமரத்ன அனைத்து சிரேஷ்ட டி.ஐ.ஜி.க்கள் மற்றும் டி.ஐ.ஜி.க்களுக்கு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த போதிலும் புதிய ஐஜிபி நியமனம் இன்னும் தாமதமாகி வருகிறது.
எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படுவார் எனவும், இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இந்த நாட்களில் இடம்பெறும் எனவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.