Friday, December 27, 2024

Latest Posts

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்பு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் இருந்து பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் தூய்மை செய்து , கிணற்றினை இறைத்த போது கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர் , தாம் அதனை அப்புறப்படுத்துவதாக கூறியுள்ளனர்.

இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.