‘ரணிலைத் தோற்கடிக்க துணைபோக மாட்டோம்’ – பிரசன்ன ரணதுங்க

0
168

‘எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம். பொருளாதார

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்க்கின்றோம்.’ – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்வரும் 13ஆம்திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பின்போது தோற்கடிக்கச் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். அந்தச் சிலரின் சதித் திட்டம் வெற்றியளிக்காது. ஏனெனில் பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் உள்ளார்கள்.

“வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அரசும் கவிழும். அந்த நிலைமை ஏற்பட மொட்டுக் கட்சி இடமளிக்காது. எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தப் பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்க்கின்றோம்.

“அவர் ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்க மறுத்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை படுமோசமடைந்திருக்கும். அவரை மாதிரி சிறந்த ஒரு தலைவர் இன்று இல்லை என்பதை நான் வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here