வடக்கில் புலம்பெயர் மக்களின் காணிகள் அபகரிப்பு

0
228

யுத்த சூழலில் வவுனியா மாவட்டத்திலிருந்து புலம்பெயர் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா ஓமந்தை மற்றும் பன்றிக்கெய்தகுளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்தது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த காணிகளை அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் அபரித்துகொண்டு, பிரிதொரு தரப்பினருக்கு வழங்கப்படுவதாகவும் குறித்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த காணிகள் நீண்ட காலமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் உறவுகளினால் பராமரிக்கப்பட்டு வந்தன. இருப்பினும் உள்ளுர் வாசிகளார் காணிகளை பராமரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே அரசியல் பின்புலம் கொண்ட சிலர் அடாவடித்தனமாக காணிகளை சுபீகரித்துக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச செயலகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படவேண்டும் எனவும், இல்லையேல் இது மீண்டும் சமூக விரிசலுக்கு ஏதுவான காரணியாக மாறுவதோடு, சமூக பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என பிரேதச மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here