சகல மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு!

0
175

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ஆம் ஆண்டுக்கான கல்வித் துறைக்காக 55 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கு அத்தியாவசியமான பாடப்புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவுகள், காலணிகள் என்பன வழங்குவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

புதிய பாடசாலை தவணை 2024 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும் சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், 2030ஆம் ஆண்டுக்குள் சகல சிறார்களுக்கும் இலவச மதிய உணவு வழங்குவதே தமது இலக்கு எனத் தெரிவித்த கல்வி அமைச்சர், அதற்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெற்றுக் கொள்வதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here