இதுவரை VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு VAT வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
“பல VAT விலக்குகள் வழங்கப்படுவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதை பெற வேண்டும். அதனால்தான் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு இந்த விலக்கை நீக்க முன் மொழியப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% வருமான அதிகரிப்பு அதாவது 378 பில்லியன் ரூபா வருமானம் பெற முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய தேவை” என அவர் கூறியுள்ளார். குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்திற்கு நேற்று (08) சபை ஒத்திவைப்பு வேளையில் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.