முட்டை – கோழி விலை குறையவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கும்; மஹிந்த அமரவீர

0
159

ஒரு வாரத்திற்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அதனை சமாளிக்க அரசாங்கம் இரண்டு நடவடிக்கைகளை எடுக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான முட்டைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு சுமார் 20 ரூபாவாகும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here