வீடு வீடாக விபரங்களை திரட்டும் பொலிசாரின் பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் உறுதி அளித்தார்.
இது விடயமாக தான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி தனது அதிகாரபூர்வ எக்ஸ்-டுவீடர் தளத்தில்,
“இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை, அரசியல் யாப்பில் இருக்கின்ற, ஆட்சி மொழி சட்டத்தை மீறுகின்ற இந்த பொலிஸ் பதிவு படிவங்களை நிராகரிக்கும்படி மக்களை கோருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.