ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆனால் பசில் ராஜபக்ஷ வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமாகவே வைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாமல் ராஜபக்ஷ பதில் அளித்திருந்தார்.
கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய கட்சியின் நிறைவேற்று சபை இந்த தீர்மானங்களை எட்டியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கட்சியின் புதிய பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்மரதன தேரரை மீண்டும் கட்சியின் தவிசாளராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது அரசியல் குழுவிற்கும் உறுப்பினர்களை நியமித்துள்ளதுடன், பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளும் இவ்வருடம் உருவாக்கப்பட்டன.
இந்தப் பதவிகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவரையும் முஸ்லிம் ஒருவரையும் தெரிவு செய்யக் கட்சி எதிர்பார்க்கிறது.