பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், நுகர்வோரின் பெரிய வெங்காயத்தின் தேவை வேகமாக குறைந்து வருவதாக வணிகர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பெரிய வெங்காயத்தின் விலை உயர்வால் அதன் தேவை படிப்படியாக குறைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இது புறக்கோட்டை மெனிங் பொது வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் எச்.எம். உபசேனா இது குறித்து டெய்லி சிலோனுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“.. கட்டாயமாக வெங்காயம் விலையானது குறையும். இப்படித்தான் கடந்த காலங்களில் கட்டிட நிர்மாணத்துறையில் சீமெந்து விலையை உயர்த்திக் கொண்டே சென்றது. பின்னர் யாரும் சீமெந்து வாங்கவில்லை. அப்படியே விலையும் குறைந்தது. பிஸ்கட் நிறுவனங்கள் விலையை உயர்த்தியது இறுதியில் குறைந்தது. இதற்கும் நுகர்வோர் நடவடிக்கை எடுத்தால், களஞ்சியசாலைகளில் வெங்காயங்கள் அழுகும். அப்போது வெங்காய விலைகள் தானாக குறையும்..”