பாதுக்க துன்னானே பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர்கள் டி.56 துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.