கதிர்காமம் ஆலயத்தின் தங்கத் தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ளார்.
இன்று (27) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்த பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சோமிபால டி. ரத்நாயக்காவை காணவில்லை என அவரது மகள்கள் மற்றும் குடும்ப உறவினர் ஒருவரும் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.