சினிமாவில் அரசியலில் கெப்டன் விஜயகாந்த் காலமானார்

Date:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விஜயகாந்த் கடந்த மாதம் 18ம் திகதி காய்ச்சல், இருமல் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அடுத்த சில நாள்களில் நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நுரையீரல் ஆதரவு சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு, தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். இதன் காரணமாக அவா் படிப்படியாக நலம் பெற்றாா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த டிச.11ம் திகதி வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.26ம் திகதி மாலை மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்று(டிச.28) வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்த, மருத்துவ அறிக்கை இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நுரையீரல் அழற்சி காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...