ஜனவரியில் எரிவாயு, எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

0
173

ஜனவரி மாதம் வற் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளதால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரியை (பெறுமதி சேர் வரி) 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இதனால் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளில் விலைகள் பாரிய அளவில் உயர்வடையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் வற் வரி ஏற்படுத்தப்போகும் தாக்கல் குறித்து கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா, 18 வீதமாக வற் வரி உயர்த்தப்படுவதால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கும் எனக் கூறினார்.

எவ்வாறாயினும், எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான 7.5 வீதம் அறவிடப்படும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரியை நீக்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனால் பாரிய அளவில் விலைகள் உயர்வடையாது எனவும் அவர் கூறினார்.

”2020ஆம் ஆண்டுமுதல் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமது உணவு, மருத்துவம் மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம். அரசாங்கம் தொடர்ச்சியாக வரிகளையும் அதிகரித்து வருவதால் மேலும் சுமைகளை சுமக்க நேரிட்டுள்ளது” என பொது மக்கள் அதிருத்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here