28.12.2023 00.30 மணி முதல் 29.12.2023 00.30 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 1467 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்பு காவல் அடிப்படையில் 56 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் போதைக்கு அடிமையான 51 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் விசேட பணியகம் ஆகியவற்றின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 164 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
460 கிராம் ஹெராயின்
653 கிராம் ஐஸ்
03 கிலோ 637 கிராம்
103,793 கஞ்சா செடிகள்
மாவா 342 கிராம்
562 மாத்திரைகள்